< Back
மாநில செய்திகள்
ராஜாக்கமங்கலம் அருகே கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்தவர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

ராஜாக்கமங்கலம் அருகே கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்தவர் கைது

தினத்தந்தி
|
12 Aug 2023 10:01 PM IST

ராஜாக்கமங்கலம் அருகே கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர்.

ராஜாக்கமங்கலம்:

ராஜாக்கமங்கலம் அருகே கோவிலில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர்.

உண்டியல் பணம் கொள்ளை

ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஆலங்கோட்டை கன்னக்குறிச்சி நடு ஊரில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தலைவராக ஸ்ரீதர் சிதம்பரநாதன் என்பவர் உள்ளார். இவர் கடந்த மாதம் 24-ந் தேதி காலையில் கோவிலுக்கு வந்த போது உண்டியல் உடைக்கப்பட்டு இதில் இருந்த பணம் கொள்ளை அடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது கணபதிபுரம் புதூர் பகுதியை சேர்ந்த செல்லசாமி நாடார் மகன் மகேஷ் (வயது39) என்பவர் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மது குடித்து வந்தார்

இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையே மகேஷ் தலைமறைவானார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள ஒரு தோட்டத்தில் மகேஷ் மறைந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, போலீசார் விரைந்து சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தொடர்ந்து பல கோவிலில்களில் உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து மது குடித்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மகேசை போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்