< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
நிதி நிறுவன அதிபரிடம் வழிப்பறி செய்தவர் கைது
|20 Jun 2023 1:00 AM IST
நிதி நிறுவன அதிபரிடம் வழிப்பறி செய்த நபர் கைது
அன்னதானப்பட்டி:-
சேலம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 31). நிதிநிறுவன அதிபர். நேற்று காலை தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அங்கு வந்த ஒருவர் அருணை திடீரென வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியதுடன் அவரிடம் இருந்து ரூ.1400-ஐ பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா, சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் வழக்குப்ப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்டவர், தாகூர் தெருவைச் சேர்ந்த தர்மன் என்கிற தர்மராஜ் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பணம், கத்தி பறிமுதல் செய்யப்பட்டன.