< Back
மாநில செய்திகள்
சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டவர் போக்சோ சட்டத்தில் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டவர் போக்சோ சட்டத்தில் கைது

தினத்தந்தி
|
7 March 2023 12:53 AM IST

நெல்லை அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

நெல்லை அருகே உள்ள அரியகுளம், தெற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 53). இவர் ஒரு சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலெட்சுமி (பொறுப்பு) போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சுந்தரத்தை நேற்று கைது செய்தார்.

மேலும் செய்திகள்