< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
மனைவி இறந்ததாக பேனர் கட்டியவரால் பரபரப்பு
|8 Sept 2023 1:00 AM IST
மனைவி இறந்ததாக பேனர் கட்டியவரால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளாப்பள்ளியை சேர்ந்தவர் சேதுராம் (வயது 44). ஆடிட்டர். இவருக்கும், அவருடைய மனைவிக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அவருடைய மனைவி பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இவர்களுக்கு இடையேயான விவாகரத்து வழக்கு கிருஷ்ணகிரி கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே கிருஷ்ணகிரி நகர் ஆர்.சி. தேவாலயம் அருகிலும், வேறு சில இடங்களிலும் சேதுராம், தன்னுடைய மனைவி இறந்து விட்டதாக பேனர் கட்டி இருந்தார். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சேதுராம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.