< Back
மாநில செய்திகள்
பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய மின் வாரிய ஊழியர் போக்சோவில் கைது...!
திருநெல்வேலி
மாநில செய்திகள்

பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய மின் வாரிய ஊழியர் போக்சோவில் கைது...!

தினத்தந்தி
|
21 May 2022 4:38 PM IST

உவரி அருகே பிளஸ் 1 மாணவியை கர்ப்பமாக்கிய பஞ்சாயத்து தலைவர் மகனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் , இளையநயினார் குளத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் சௌந்திரபாண்டியபுரம் ஊராட்சி மன்ற தலைவராக தற்போது இருந்து வருகிறார். இவரது மகன் வெங்கடேஷ் ஐ.டி.ஐ படித்துவிட்டு மின் வாரியத்தில் ஒப்பந்த வேலை செய்து வருகிறார்.

வெங்கடேஷின் அக்கா உவரி அருகேயுள்ள குட்டம் கிராமத்தில் திருமணமாகி வசித்து வருகிறார். வெங்கடேசன் அக்கா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அக்கா வீட்டிற்கு பக்கத்து வீட்டை சேர்ந்த பிளஸ் 1 படித்து வரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கர்ப்பமாக்கி உள்ளார்.

இது குறித்து மாணவியின் பெற்றோருக்கு தற்போது தான் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மகள் 7 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ந்து போன மாணவியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி வழக்குபதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் மகன் வெங்கடேஷை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்