< Back
மாநில செய்திகள்
தேனி
மாநில செய்திகள்
தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது
|20 Oct 2023 4:45 AM IST
கம்பத்தில் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம் டி.டி.வி. தினகரன் நகரை சேர்ந்தவர் சென்றாயன் (வயது 26). கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் முருகன் (52). இருவருக்கும் இடையே முன்விேராதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் சென்றாயன் வீட்டில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தபோது முருகன் தகராறு செய்ததாக தெரிகிறது. அப்போது ஆத்திரம் அடைந்த முருகன் அரிவாளை எடுத்து சென்றாயனை வெட்ட முயன்றார். அதனை சென்றாயன் தடுக்க முயன்றபோது அவருடைய காதில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து சென்றாயன் அளித்த புகாரின்பேரில், கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.