< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மூதாட்டியை இரும்பு கம்பியால் தாக்கியவர் கைது
|19 Dec 2022 1:38 AM IST
நெல்லை டவுனில் மூதாட்டியை இரும்பு கம்பியால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை டவுன் ஆலடி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மாடசாமி மனைவி சொள்ளமுத்து (வயது 60). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் திருப்பதி (40). இவர்களுக்குள் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலையில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திருப்பதி அங்கு இருந்த இரும்பு கம்பியால் சொள்ளமுத்துவை தாக்கியுள்ளார். இதில் அவர் காயம் அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை டவுன் போலீசார் திருப்பதி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.