< Back
மாநில செய்திகள்
தம்பதியை கட்டையால் தாக்கியவர் கைது
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

தம்பதியை கட்டையால் தாக்கியவர் கைது

தினத்தந்தி
|
14 Oct 2023 12:56 AM IST

தம்பதியை கட்டையால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

விராலிமலை ஒன்றியம், தொண்டைமான்நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட செப்பிளாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சப்பாணி (வயது 57). இவரது மனைவி அன்னக்கிளி (55). இவர்கள் ஆடு வளர்த்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் அன்னக்கிளி மேய்த்து வந்த ஆடு அவரது வீட்டின் அருகே உள்ள சசிகுமார் என்பவர் தோட்டத்தில் மேய்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் தம்பதிக்கும் சசிகுமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த சசிகுமாரின் தம்பி நந்தகுமார் (23) கட்டையால் சப்பாணி, அன்னக்கிளியை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மாத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து தம்பதியை கட்டையால் தாக்கிய நந்தகுமாரை நேற்று கைது செய்தார். பின்னர் அவரை கீரனூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் போலீசார் அடைத்தனர்.

மேலும் செய்திகள்