< Back
மாநில செய்திகள்
மனைவியை சுத்தியலால் தாக்கியவர் கைது
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மனைவியை சுத்தியலால் தாக்கியவர் கைது

தினத்தந்தி
|
27 Oct 2023 12:15 AM IST

மனைவியை சுத்தியலால் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் அருகே உள்ள கவரங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 31). கொத்தனார். இவருடைய மனைவி ரஞ்சிதா(27). இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. வெற்றி அமர்சன், கபில்அமரசன் ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். ராமதாஸ் தினமும் மதுபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டாராம்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மதுபோதையில் வந்த ராமதாஸ் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே 2 மணியளவில் எழுந்த ராமதாஸ் மனைவியின் மீது ஆத்திரம் அடைந்து சுத்தியலால் தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த ரஞ்சிதா ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை கவலைக்கிடமாகவே மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுதொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமதாசை கைது செய்தனர். ராமதாசிற்கு ஏற்கனவே திருமணம் நடந்து விவாகரத்து ஆனது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்