< Back
மாநில செய்திகள்
மதுரை-கோவை ரெயில் போத்தனூருடன் நிறுத்தம்
மதுரை
மாநில செய்திகள்

மதுரை-கோவை ரெயில் போத்தனூருடன் நிறுத்தம்

தினத்தந்தி
|
3 March 2023 1:35 AM IST

சேலம் கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மதுரை-கோவை ரெயில் போத்தனூருடன் நிறுத்தப்படுகிறது.

தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட சேலம் கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து, மதுரை வழியாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, வருகிற 20-ந் தேதி மற்றும் 27-ந் தேதிகளில் கீழ்கண்ட ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நெல்லை-ஈரோடு எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16846) காலை 6.15 மணிக்கு பதிலாக 2 மணி நேரம் தாமதமாக காலை 8.15 மணிக்கு நெல்லையில் இருந்து ஈரோடு புறப்பட்டு செல்லும்.

கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16322) மேற்கண்ட நாட்களில் கோவையில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 10 மணிக்கு புறப்படும்.

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16340) நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 6.15 மணிக்கு பதிலாக காலை 7.15 மணிக்கு புறப்படும்.

நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16321) காலை 7.35 மணிக்கு பதிலாக காலை 8.05 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மதுரையில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்படும், மதுரை-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16722) வருகிற 12-ந் தேதி மற்றும் 13-ந் தேதிகளில் போத்தனூர் வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16721) மேற்கண்ட நாட்களில் போத்தனூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.52 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும்.

Related Tags :
மேலும் செய்திகள்