< Back
மாநில செய்திகள்
பள்ளிக்கூட சுற்றுச்சுவரில் மோதி கவிழ்ந்த லாரி
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

பள்ளிக்கூட சுற்றுச்சுவரில் மோதி கவிழ்ந்த லாரி

தினத்தந்தி
|
19 Sept 2023 12:15 AM IST

மயிலாடியில் பள்ளிக்கூட சுற்றுச்சுவரில் மோதி கவிழ்ந்த லாரி

அஞ்சுகிராமம்,

நெல்லை மாவட்டத்தில் இருந்து நேற்று மாலையில் ஜல்லிகற்களை ஏற்றி கொண்டு நாகர்கோவிலை நோக்கி ஒரு டிப்பர் லாரி புறப்பட்டது. அது மயிலாடியில் மெயின் ரோடு அருகில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளி அருகே வந்த போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட லாரிைய டிரைவர் ஓரமாக ஒதுக்கினார். அப்போது லாரி நிலை தடுமாறி பள்ளிக்கூட சுற்றுச்சுவர் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில் சுற்றுசுவர் சுமார் 70 அடி நீளம் வரை இடிந்து சேதமடைந்தது. மேலும் லாரியை ஓட்டி வந்த டிரைவர் படுகாயம் அடைந்தார். அவரை அந்தப் பகுதியில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த விபத்து குறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்