< Back
மாநில செய்திகள்
கூரை வீட்டுக்குள் லாரி புகுந்தது
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கூரை வீட்டுக்குள் லாரி புகுந்தது

தினத்தந்தி
|
1 March 2023 12:15 AM IST

வடபொன்பரப்பி அருகே கூரை வீட்டுக்குள் லாரி புகுந்தது ஆட்கள் இல்லாததால் உயிர்சேதம் தவிர்ப்பு

மூங்கில்துறைப்பட்டு

சங்கராபுரம் பகுதியில் இருந்து மூலக்காடு பகுதியை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே உள்ள மேல்புகுசானிகுழி பகுதியை சேர்ந்த செல்வம் மகன் மனோகரன்(வயது 29) என்பவர் லாரியை ஓட்டினார். ரங்கப்பனூரில் வந்தபோது திடீரென மனோகரனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய லாரி சாலையோரம் இருந்த மாயத்தேவன்(52) என்பவரின் கூரை வீட்டுக்குள் புகுந்து நின்றது. இந்த விபத்தில் மயங்கிய டிரைவர் மனோகரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லாரி மோதிய வேகத்தில் கூரை வீடு முற்றிலும் சேதம் அடைந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதமும் தவிர்க்கப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்