கரூர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிமரத்தை காணவில்லை என புகார்
|விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிமரத்தை காணவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டது.
குளித்தலை அருகே உள்ள கீழவதியம் கிராம பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிளை சார்பில் அக்கட்சியின் கொடிமரம் வைக்கப்பட்டு இருந்தது. அந்த கொடி மரத்தின் அருகே உள்ள சிமெண்டு கட்டையில் ரெட்டமலை சீனிவாசன், அண்ணல் அம்பேத்கர், தொல் திருமாவளவன் ஆகிய தலைவர்களின் படம் வரையப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்று அப்பகுதி நிர்வாகிகள் பார்த்தபோது, அங்கிருந்த கட்சி கொடிமரத்தை காணவில்லையாம். அதுபோல அங்கு வரையப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர், தொல் திருமாவளவன்உருவபடம் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.இதையடுத்து கட்சி தலைவர்கள் படத்தை சேதப்படுத்தியும், கட்சியின் கொடி மரத்தை பிடுங்கிச் சென்ற மர்மநபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குளித்தலை போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் நேற்று புகார் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.