< Back
மாநில செய்திகள்
2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தினத்தந்தி
|
3 Jun 2022 10:03 PM IST

திருட்டு, கஞ்சா விற்பனையில் கைதுசெய்யப்பட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ராணிப்பேட்டை

சென்னை, சைதாப்பேட்டை, ஆலந்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் விஜய் என்கிற ஆத்து விஜய் (வயது 25). இவர் ராணிப்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக அவரை ராணிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோன்று ஆற்காடு தண்டு பஜாரை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது24). இவர் சிப்காட் பகுதியில் கஞ்சா விற்றதாக இவரை ராணிப்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்கள் இருவரின் குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு அவர்களை குண்டர்தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் விஜய், ஜெயக்குமார் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய கலெக்டர் பாஸ்கரபாண்டியன் உத்தரவிட்டார்.

Related Tags :
மேலும் செய்திகள்