< Back
மாநில செய்திகள்
மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் தொழிலாளர் துறையினர் திடீர் ஆய்வு-20-க்கும் மேற்பட்ட தராசுகள் பறிமுதல்
மதுரை
மாநில செய்திகள்

மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் தொழிலாளர் துறையினர் திடீர் ஆய்வு-20-க்கும் மேற்பட்ட தராசுகள் பறிமுதல்

தினத்தந்தி
|
6 July 2023 3:38 AM IST

மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் தொழிலாளர் துறையினர் திடீர் ஆய்வு-20-க்கும் மேற்பட்ட தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.


மதுரை மண்டல தொழிலாளர் இணை கமிஷனர் மற்றும் எடை அளவு கட்டுப்பாட்டு கூடுதல் கமிஷனர் சுப்பிரமணியன் தலைமையிலான தொழிலாளர் துறையினர் நேற்று மாட்டுத்தாவணியில் உள்ள பழ மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இரவு நடந்த இந்த ஆய்வில் முத்திரையிடாத தராசுகள் அனுமதி பெறாத எலக்ட்ரானிக் தராசுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விதிகளுக்கு புறம்பாக தராசுகளை பயன்படுத்தி விற்பனையில் ஈடுபட்ட கடைக்காரர்கள் மீது எடை அளவு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் சுமார் 20-க்கும் மேற்பட்ட தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதிகாரிகளின் இரவு நேர திடீர் ஆய்வால் பழ மார்க்கெட்டில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்

Related Tags :
மேலும் செய்திகள்