< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் என்பது நகைச்சுவை- அண்ணாமலை
|7 April 2024 2:57 PM IST
கோவையில் 3 ஆண்டுகளாக திமுகவால் ஒரு பேருந்து நிலையமே அமைக்க முடியவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னைக்கு அடுத்ததாக கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியில் கூடுதல் ஒன்றை சேர்த்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என முதல் அமைச்சர் கூறியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்வினையாற்றியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியதாவது;
கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் என்பது நகைச்சுவையாக கருதப்பட வேண்டியது. கோவையில் 3 ஆண்டுகளாக திமுகவால் ஒரு பேருந்து நிலையமே அமைக்க முடியவில்லை. திமுகவின் தேர்தல் வித்தைகளால் இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்களை ஏமாற்ற முடியாது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.