< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
|23 Aug 2023 12:15 AM IST
வழக்கு விசாரணைக்கு ஆஜராக இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மகிளா கோர்ட்டு உத்தரவிட்டது
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த வழக்காணி கிராமத்தை சேர்ந்த நாகமீனாள் என்பவரை பாகப்பிரிவினை தொடர்பான தகராறில் வெட்டியதாக இளையான்குடி போலீசார் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணையில் அப்போது சப்-இன்ஸ்பெக்டராக இருந்த செந்தூர்பாண்டியன் சாட்சி சொல்ல வரவில்லை. இதை தொடர்ந்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து வருகிற செப்டம்பர் மாதம் 12-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த நீதிபதி சரத்துராஜ் உத்தரவிட்டார். செந்தூர்பாண்டியன் தற்போது இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியில் பணிபுரிந்து வருகிறார்.