< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
விபத்தில் காயமடைந்த தொழிலாளி சாவு
|8 Dec 2022 12:30 AM IST
விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தார்.
பெரம்பலூரை அடுத்த குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட தந்தை பெரியார் நகரை சேர்ந்தவர் திருமுருகன்(வயது 58). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 3-ந் தேதி மதியம் பாளையத்தில் இருந்து குரும்பலூர் சென்ற மினி பஸ்சில் பயணம் செய்தார். அப்போது பஸ்சில் இருந்து கீழே இறங்கியபோது, அந்த வழியே சென்ற கார் திருமுருகன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த திருமுருகன், பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையிலும், அதனைத்தொடர்ந்து உயர்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி திருமுருகன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமுருகனின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.