< Back
மாநில செய்திகள்
விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சாவு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சாவு

தினத்தந்தி
|
30 Aug 2023 2:23 AM IST

விக்கிரமசிங்கபுரம் அருகே விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள ஆறுமுகம்பட்டி கீழத்தெருவைச் சேர்ந்தவர் ராமன் (வயது 70). சலவை தொழிலாளியான இவர் கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்து சிவந்திபுரம் மெயின் ரோட்டில் உள்ள டீக்கடைக்கு வந்தார். பின்னர் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் ராமன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராமன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்