< Back
மாநில செய்திகள்
காயத்துடன் கிடந்த மயிலுக்கு வனத்துறையினர் சிகிச்சை
விழுப்புரம்
மாநில செய்திகள்

காயத்துடன் கிடந்த மயிலுக்கு வனத்துறையினர் சிகிச்சை

தினத்தந்தி
|
31 May 2023 12:15 AM IST

திண்டிவனத்தில் காயத்துடன் கிடந்த மயிலுக்கு வனத்துறையினர் சிகிச்சை

திண்டிவனம்

திண்டிவனம் புதிய பஸ் நிலையத்தின் பின்பகுதியில் மயில் ஒன்று காயத்துடன் பறக்க முடியாமல் கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் வெகுநேரமாகியும் வனத்துறையினர் யாரும் வராததால் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் காயத்துடன் கிடந்த மயிலை புதுச்சேரி சாலையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் கொண்டு சென்று அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன் பின்னர் அந்த மயிலுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர். அந்த மயில் எவ்வாறு காயம் அடைந்தது என்று தெரியவில்லை? யாராவது வேட்டையாடியபோது காயம் அடைந்ததா? அல்லது ஏதேனும் வாகனங்களில் அடிப்பட்டு காயம் அடைந்ததா? என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்