சேலம்
குழந்தை இயேசு பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
|சேலம் 4 ரோடு குழந்தை இயேசு பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
சேலம் 4 ரோடு குழந்தை இயேசு பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.
குழந்தை இயேசு பேராலயம்
சேலம் 4 ரோடு பகுதியில் குழந்தை இயேசு பேராலயம் உள்ளது. தேவாலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக தேவலாயத்தை சுற்றி கொடி ஊர்வலம் நடைபெற்றது. சேலம் மறை மாவட்ட முன்னாள் ஆயர் சிங்கராயன் திருவிழா கொடியேற்றி வைத்தார்.
பின்னர் பங்கு தந்தை ஜோசப் லாசர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் உதவி பங்கு தந்தை ரஞ்சித்குமார் உள்பட கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரை தினமும் மாலை தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நடக்கிறது.
சிறப்பு திருப்பலி
விழாவின் முக்கிய நாளான 15-ந்தேதி காலை 7 மணிக்கு சேலம் மறை மாவட்ட ஆயர் அருள் செல்வம் ராயப்பன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடக்கிறது. அன்று மாலை 7 மணிக்கு தேர் பவனி நடக்கிறது. சேலம் மறை மாவட்ட முதன்மை குரு அருளப்பன் கலந்து கொண்டு தேர் பவனியை தொடங்கி வைக்கிறார். இரவு 8.30 மணிக்கு நற்கருணை ஆசிர் ஆராதனையும், 9 மணிக்கு கொடியிறக்கமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பேராலய விழா குழுவினர் செய்து வருகின்றனர்.