< Back
மாநில செய்திகள்
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை
மாநில செய்திகள்

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

தினத்தந்தி
|
20 Sept 2023 9:06 AM IST

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசி. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இவருடைய வீட்டில் இன்று காலை வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக மின்சார வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி பின்னர் ஓய்வு பெற்றவர். அவர் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இதற்கு முன்பு உதவியாளராக பணியாற்றி உள்ளார்.

சென்னையின் துரைப்பாக்கம், பள்ளிக்கரணை, நீலாங்கரை, நாவலூர், ஓ.எம்.ஆர்., எண்ணூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளரான காசி வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்