< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சாலையோரம் இருந்த மின்கம்பத்தோடு சேர்த்து அமைத்த கழிவுநீர் கால்வாய் - மீண்டும் கதறவிட்ட ஒப்பந்ததாரர்கள்...!
|18 Aug 2022 3:53 PM IST
வாலாஜாப்பேட்டை அருகே சாலையோரம் இருந்த மின் கம்பத்தை அகற்றாமல் அப்படியே கால்வாய் கட்டப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை,
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே அனந்தலை ஊராட்சியில் உள்ள 7 வது வார்டில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
அப்போது, சாலையின் ஓரத்தில் மின்கம்பம் இருந்த நிலையில், அதனை அப்புறப்படுத்தாமல் அப்படியே கால்வாய் கட்டப்பட்டுள்ளது. மேலும், கால்வாய்க்குள் மின்கம்பம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஏற்கெனவே மோட்டார் சைக்கிள், ஜீப், அடிபம்பு போன்றவை மீது சாலை அமைத்த சம்பவம் சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், தற்போது மின்கம்பத்தை அகற்றாமல் கால்வாய் அமைக்கப்பட்டுள்ள சம்பவம் மீண்டும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பல வருடங்களாக கால்வாய் அமைக்க வலியுறுத்தியதாகவும், தற்போது தரமற்ற முறையில் இவைகள் அமைக்கப்படுவதாகவும் வார்டு உறுப்பினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.