< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
|27 April 2023 1:44 PM IST
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 421 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
சென்னை,
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்று கூறினார்.
தொற்று பரவலை குறைக்க அரசு தேவையான நடவடிக்கை எடுத்துவருகிறது என்று கூறிய அவர், கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 421 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.