< Back
மாநில செய்திகள்
2-வது நாளாக மணல் குவாரி பணிகள் நிறுத்தம்
கரூர்
மாநில செய்திகள்

2-வது நாளாக மணல் குவாரி பணிகள் நிறுத்தம்

தினத்தந்தி
|
14 Sept 2023 12:18 AM IST

2-வது நாளாக மணல் குவாரி பணிகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மணல் குவாரிகளில் அதிகளவில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டனர். மேலும், மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து கரூர் அருகே உள்ள வாங்கல் அடுத்துள்ள மல்லம்பாளையம் பகுதியில் உள்ள மணல் குவாரியில் மணல் அள்ளும் பணிகள் நிறுத்தப்பட்டன. 2-வது நாளாக நேற்றும் மணல் குவாரி செயல்படவில்லை. இதனையடுத்து லாரிகள் நிறுத்தும் செம்மடை பகுதியில் 3 நாட்கள் குவாரி விடுமுறை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. மேலும் அப்பகுதியில் நூற்றுக்கணக்கான லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்