< Back
மாநில செய்திகள்
வெம்பக்கோட்டை அகழாய்வில் திமிலுடன் கூடிய காளை உருவம் கண்டுபிடிப்பு.!
மாநில செய்திகள்

வெம்பக்கோட்டை அகழாய்வில் திமிலுடன் கூடிய காளை உருவம் கண்டுபிடிப்பு.!

தினத்தந்தி
|
12 Oct 2023 12:24 PM IST

வெம்பக்கோட்டை அகழாய்வில் திமிலுடன் கூடிய காளை உருவம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் அகழாய்வு நடந்து வருகிறது. இதில் பல்வேறு அரிய பொருட்கள் கிடைத்து வருகின்றன. இங்கு கிடைக்கும் பொருட்கள் அடிப்படையில் இப்பகுதியில் பழங்காலத்தில் தமிழர் நாகரிகம் சிறந்தோங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், வெம்பக்கோட்டை அகழாய்வின் போது, சுடுமண்ணால் ஆன திமிலுடன் கூடிய காளை உருவம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் கூறுகையில், முன்னோர்கள் பல்வேறு வீர விளையாட்டுக்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்