< Back
மாநில செய்திகள்
தகாத உறவுக்குத் தடையாக இருந்த கணவன்... கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி - பகீர் சம்பவம்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தகாத உறவுக்குத் தடையாக இருந்த கணவன்... கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி - பகீர் சம்பவம்

தினத்தந்தி
|
24 April 2024 6:42 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில், தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள கொடுங்குளத்தை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் ஆர்த்தி என்பவருக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், கணவரின் நண்பரான இளையராஜாவுடன் ஆர்த்திக்கு தகாத உறவு இருந்து வந்துள்ளது.

இதையறிந்து ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், இருவரையும் கண்டித்து எச்சரித்த நிலையில், காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல ஆர்த்தி திட்டமிட்டிருக்கிறார். அதன்படி, கடந்த 2021-ம் ஆண்டு, தேவகோட்டை அருகேயுள்ள இலக்கினி வயல் காட்டுப்பகுதிக்கு ஸ்ரீகாந்தை மது அருந்த அழைத்துச் சென்ற இளையராஜா, அங்கு தன் நண்பர்களுடன் சேர்ந்து அவரை அரிவாளால் வெட்டிக் கொன்று புதைத்துள்ளார்.

இதையடுத்து, குடும்ப பிரச்சனையால் கணவர் கோபித்துக்கொண்டு வெளியூர் சென்று விட்டதாக கூறி சுமார் இரண்டரை வருடங்களாக ஆர்த்தி நாடகமாடி வந்துள்ளார். இதனிடையே ஶ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நடந்த விசாரணையில் ஶ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டதும், அவரது மனைவி ஆர்த்தி, இளையராஜா மற்றும் அவரது நண்பர்கள் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதும் உறுதியானது.

இந்த நிலையில் ஆர்த்தி, இளையராஜா மற்றும் அவரது நண்பர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்