அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்த கணவன்... விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து கணவன் தகராறு செய்ததால் விரக்தி அடைந்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை,
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த கூ.கவுண்டம்பாளையம் மாந்தோப்பை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருடைய மனைவி புவனேஸ்வரி (27 வயது). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ராஜேஷ்குமார், அடிக்கடி மது குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் புவனேஸ்வரி கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
அவரை பெற்றோர் சமாதானம் செய்து மீண்டும் கணவன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அதன்பிறகும் ராஜேஷ்குமார் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து தாக்கியதாக தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த புவனேஸ்வரி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையில் தூக்குப் போட்டு உள்ளார்.
இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.