< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மனைவியை ஓடஓட விரட்டி வெட்டிய கணவன்... மருத்துவமனையிலேயே வெறிச்செயல் - பழனியில் அதிர்ச்சி சம்பவம்
|17 Jun 2023 5:40 PM IST
பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த மனைவியை ஓட ஓட விரட்டி, அரிவாளால் கணவன் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பழனி,
பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த மனைவியை ஓட ஓட விரட்டி, அரிவாளால் கணவன் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பழனி அருகே வி.கே மில் பகுதியை சேர்ந்த தம்பதியர் மணி-பிரியதர்ஷினி. இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது, பிரியதர்சினியை, மணி தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு பிரியதர்சினி வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மணி, தனது மனைவியை ஓட ஓட விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மனைவி பிரியதர்சினி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பி ஓட முயன்ற கணவர் மணியை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.