சென்னை
மனைவியை கத்தியால் குத்திய கணவர்
|சென்னை கொரட்டூரில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை கொரட்டூரைச் சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது 40). இவருடைய மனைவி சுவேதா (37). பாஸ்கரன் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவி சுவேதாவுடன் தகராறு செய்து வந்தார். இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுவேதா, கணவரை விட்டு பிரிந்து கொளத்தூர் ஜி.கே.எம். காலனி, 32-வது தெருவில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
நேற்று அதிகாலை பாஸ்கரன் குடித்துவிட்டு மாமியார் வீட்டுக்கு சென்று மனைவி சுவேதாவுடன் தகராறு செய்தார். இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாஸ்கரன், தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் மனைவி சுவேதாவின் தலை மற்றும் கால் பகுதியில் குத்தினார். இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் பெரியார் நகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்த புகாரின்பேரில் பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.