< Back
மாநில செய்திகள்
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் கையை கத்தியால் வெட்டிய கணவன்
சென்னை
மாநில செய்திகள்

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் கையை கத்தியால் வெட்டிய கணவன்

தினத்தந்தி
|
26 Jan 2023 11:29 AM IST

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியின் கையை கத்தியால் வெட்டிய கணவனை போலீசார் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் (வயது 41). இவருடைய மனைவி தைரியலட்சுமி (40). இவரது செல்போனுக்கு மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு தொடர்ந்து தகாத வார்த்தைகளால் பேசி வந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தைரியலட்சுமி, இதுபற்றி தனது கணவர் செந்திலிடம் தெரிவித்தார். இதனால் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட அவர், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.

இதனால் கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரம் அடைந்த செந்தில், வீட்டில் இருந்த சிறிய கத்தியால் மனைவி தைரியலட்சுமியின் வலது கையில் வெட்டினார்.

இதில் காயம் அடைந்த தைரியலட்சுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரது கையில் 8 தையல் போடப்பட்டது.

சம்பவம் தொடர்பாக தைரியலட்சுமி அளித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்