< Back
மாநில செய்திகள்
கணவன், மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
சேலம்
மாநில செய்திகள்

கணவன், மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

தினத்தந்தி
|
7 Feb 2023 1:30 AM IST

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு கணவன், மனைவி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நிலம் அளவீடு செய்ய ரூ.2 லட்சம் கேட்பதாக புகார் கூறியுள்ளனர்.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இந்த நிலையில் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன், இவருடைய மனைவி சாந்தி 2 பேரும் நேற்று மனு கொடுக்க வந்தனர்.

அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த டீசலை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதை பார்த்த அங்கிருந்த போலீசார் அவர்களிடம் இருந்து டீசல் கேனை பிடுங்கி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

நில அளவீடு

இது குறித்து அவர்கள் கூறும் போது எங்களுக்கு சொந்தமான நிலத்தை அளவீடு செய்து கொடுக்கும் படி பல முறை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை.

இந்த நிலையில் நிளத்தை அளவீடு செய்ய ரூ.2 லட்சம் அலுவலர் கேட்கிறார். அவ்வளவு பணம் கொடுக்க இயலாது. எனவே நிலத்தை அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள்

சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தீக்குளிக்க முயன்றார். இது குறித்து அவர் கூறும் போது, என்னுடைய மனைவி என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். எங்கள் இருவர் பெயரில் 900 சதுர அடி நிலம் வாங்கினோம். அந்த நிலத்தில் எனது பங்கை பிரித்து தரும்படி பலமுறை கேட்டேன். அவர் தர மறுக்கிறார். எனவே எனக்கு உரிய பங்கை பிரித்து தர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றேன் என்றார்.

நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 386 மனுக்கள் பெற்றப்பட்டன. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் 15 பேருக்கு ரூ.1.29 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும் செய்திகள்