சென்னை
உபா சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
|உபா சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
உபா சட்டம் மற்றும் தேதிய புலனாய்வு முகமையை (என்.ஐ.ஏ) எதிர்த்தும், பா.ஜ.க. மற்றும் தமிழக கவர்னரை கண்டித்தும் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் த.வேல்முருகன் எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை தலைவர் எஸ்.எஸ்.பாலாஜி, மனிதநேய மக்கள் கட்சி துணை தலைவர் டி.எஸ்.அமித் ஆகியோர் கலந்துகொண்டு ஆதரவு அளித்தனர்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டம் குறித்து பேசுகையில், 'சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டமான உபா சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். என்.ஐ.ஏ. என்ற தேசிய புலனாய்வு முகமை கலைக்கப்பட வேண்டும். மாநில அரசுகளுக்கு எதிராக போட்டி ஆட்சி நடத்துகிற கவர்னர் பதவிகள் ஒழிக்கப்பட வேண்டும்' என கூறினார்.