< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
தொடர்மழையால் வீடு இடிந்து விழுந்தது
|18 Oct 2023 2:17 AM IST
அருப்புக்கோட்டையில் தொடர்மழையால் வீடு இடிந்து விழுந்தது
அருப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அருப்புக்கோட்டை அருகே சேதுராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட காசிலிங்காபுரத்தில் தொடர் மழை காரணமாக கோபால் - பாண்டியம்மாள் தம்பதியரின் ஓட்டு வீடு திடீரென இடிந்து விழுந்து முழுவதும் சேதமடைந்தது.
அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் வீட்டில் இருந்த பொருட்கள் சேதமடைந்தது. தாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருவதால் தங்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தம்பதியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.