< Back
மாநில செய்திகள்
ஓட்டல் தீப்பிடித்து எரிந்தது
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

ஓட்டல் தீப்பிடித்து எரிந்தது

தினத்தந்தி
|
17 Aug 2022 12:30 AM IST

வேதாரண்யத்தில் ஓட்டல் தீப்பிடித்து எரிந்தது.

வேதாரண்யம்:

வேதாரண்யம் சேதுரஸ்தாவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது67). இவர் வேதாரண்யேஸ்வரர் கோவில் அருகே ஓட்டல் வைத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஓட்டலின் பின்பக்கம் உள்ள சமையல் கூடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் ஓட்டலின் சமையல் கொட்டகை முற்றிலும் எரிந்து சாம்பலானது. தீவிபத்து தகவல் அறிந்த பொதுமக்கள் ஓட்டல் முன்பு திரண்டனர். அப்போது அங்கு வந்த வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், இன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வந்து பொதுமக்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த தீவிபத்தில் ஓட்டலில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார்.ஓட்டல் சமையல் கூடத்தில் இருந்த கியாஸ் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் செய்திகள்