< Back
மாநில செய்திகள்
ஈரோட்டில் 100 டிகிரியை நெருங்கியது வெயில்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோட்டில் 100 டிகிரியை நெருங்கியது வெயில்

தினத்தந்தி
|
23 March 2023 9:28 PM GMT

ஈரோட்டில் 100 டிகிரியை வெயில் நெருங்கியது. அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

ஈரோட்டில் 100 டிகிரியை வெயில் நெருங்கியது. அனல் காற்று வீசுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

100 டிகிரி

ஈரோட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. பகல் 10 மணிக்கே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுகிறது. நேரம் செல்ல செல்ல அதன் தாக்கம் அதிகரிப்பதால் பொதுமக்கள் வெளியில் செல்வதையே தவிர்த்து விடுகிறார்கள். பெண்கள் பலர் சேலையின் முந்தானையையும், துப்பட்டாவை தலையில் போர்த்தி கொண்டும் சென்றார்கள். இதேபோல் பலர் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பித்து கொள்ள குடையை பிடித்தபடி நடந்து சென்றதையும் காணமுடிந்தது.

அனல் காற்று வீசியதால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கடுமையாக அவதி அடைந்தனர். வெயிலில் சிறிது தூரம் சென்றாலே தோல் சுடுவது போன்ற உணர்வு ஏற்பட்டது. கோடை காலத்தின் தொடக்கத்திலேயே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஈரோட்டில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 99 டிகிரி வெயில் பதிவானது. நேற்று 97 டிகிரி வெயில் பதிவானது. எனினும் நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ரோட்டில் அனல் காற்று வீசியது. இதனால் இனிவரும் நாட்களில் 100 டிகிரியை கடந்து வெயிலின் தாக்கம் இருக்குமோ என்கிற அச்சம் மக்களிடையே ஏற்பட்டு உள்ளது.

குளிர்பானங்கள்

வெயிலின் கொடுமையில் இருந்து தப்பித்து கொள்ள பொதுமக்கள் குளிர்ச்சியான உணவு வகைகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் குளிர்பானங்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. குறிப்பாக சாலையோர குளிர்பான கடைகளும் ஆங்காங்கே முளைத்துவிட்டன. இயற்கையாக கிடைக்கும் குளிர்ச்சி அடைய செய்யும் இளநீர், நுங்கு, முலாம்பழம், தர்பூசணி போன்றவற்றின் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. நுங்கு, தர்பூசணியின் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளதால், ஆங்காங்கே சாலையோரமாக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இருசக்கர வாகனங்கள், கார்களில் செல்பவர்கள் தர்பூசணி, நுங்கு போன்றவற்றை விரும்பி வாங்கி சாப்பிடுகிறாா்கள்.

பகலில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இரவிலும் வெப்ப சலனம் அதிகமாக இருப்பதால் வீடுகளில் தூங்க முடியாமல் மக்கள் சிரமம் அடைந்தனர். சிறிதுநேரம் மின்தடை ஏற்பட்டு மின்விசிறி சுற்றாமல் இருந்தாலும் வீட்டுக்குள் இருக்க முடியாத அளவுக்கு வெப்ப சலனம் அதிகமாக காணப்படுகிறது. எனவே வெப்பத்தை தணிக்க மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் உள்ளனர்.

Related Tags :
மேலும் செய்திகள்