< Back
மாநில செய்திகள்
ஆபாச படங்கள் காட்டி மாணவிகளிடம் சில்மிஷம்... தலைமை ஆசிரியர் கைது
மாநில செய்திகள்

ஆபாச படங்கள் காட்டி மாணவிகளிடம் சில்மிஷம்... தலைமை ஆசிரியர் கைது

தினத்தந்தி
|
6 Feb 2024 12:40 AM IST

போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜான்சனை நேற்று கைது செய்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே தொடக்க பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் தூத்துக்குடியை சேர்ந்த ஜான்சன் (வயது 58) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் பள்ளியில் படிக்கும் 2 மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாகவும், செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இதுகுறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். அவர்கள் இதுதொடர்பாக கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் போலீசார், பள்ளிக்கூடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ஜான்சன் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ஜான்சனை நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி பேரூரணி ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்