< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
கடலில் மூழ்கி தலைமை ஆசிரியர் சாவு
|8 July 2023 4:31 PM IST
கடலில் மூழ்கி தலைமை ஆசிரியர் பரிதாபமாக இறந்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 52). இவர் கீழார்கொள்ளை கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி காலை வழக்கம் போல் வேலைக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பழனியப்பனின் உடல் கல்பாக்கம் கடற்கரையோரம் கிடப்பதாக அவர்களது உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. கடலில் மூழ்கி இறந்த பழனியப்பனின் உடல் கடற்கரையில் ஒதுங்கியிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.