< Back
மாநில செய்திகள்
மதுரையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்
மாநில செய்திகள்

மதுரையில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்

தினத்தந்தி
|
24 Sep 2023 7:19 AM GMT

மதுரையில் நடைபெற்ற ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கூட்ட நெரிசல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது.

மதுரை,

தமிழகத்தின் மிக முக்கிய நகரங்களில் தெருக்களில் கூடி கொண்டாடும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி 5 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மதுரையில் இந்த கொண்டாட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கொண்டாட்டம் மதுரையின் அண்ணாநகர் பகுதியில் விடுமுறை நாளான இன்று நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் காலை முதல் இளைஞர்கள் அண்ணாநகரில் கூடத் தொடங்கினர். நிகழ்ச்சியும் தொடங்கி உற்சாகமாக நடைபெற்று கொண்டிருத்தது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி மற்றும் நடிகர் சூரி ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் நேரம் செல்ல செல்ல இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் கூடத்தொடங்கினர். ஒரு கட்டத்தில் மாநகராட்சி நிர்வாகம் நினைத்ததை விட கூட்டம் கட்டுக்கு அடங்காமல் சென்றது. இதில் விழா மேடைக்கு அருகே செல்ல பாதுகாப்புக்கு வைக்கப்பட்ட தடுப்புகளை தாண்டி கூட்டம் முண்டியடித்து செல்ல முயன்றது. இதனால் நெரிசல் அதிகமாகியது. இளைஞர்கள் ஒருவர் மேல் ஒருவர் விழத் தொடங்கினர்.மேலும் சிலர் மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தனர். இதனால் ஹாப்பி ஸ்ட்ரீட் கொண்டாட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்