அரியலூர்
தூக்கில் பிணமாக தொங்கிய பெண்
|பெண் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி கவிதா(வயது 42). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சேட்டு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். கவிதா அப்பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று கவிதாவின் வீட்டிற்கு அவரது அக்காள் சென்றார். அப்போது வீட்டில் சேலையால் தூக்குப்போட்ட நிலையில் கவிதா பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த விக்கிரமங்கலம் போலீசார் அங்கு சென்று, கவிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தினர். இதில் அவர் வயிற்று வலி காரணமாக தற்ெகாலை செய்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இது குறித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.