< Back
மாநில செய்திகள்
தூக்கில் பிணமாக தொங்கிய மாற்றுத்திறனாளி
அரியலூர்
மாநில செய்திகள்

தூக்கில் பிணமாக தொங்கிய மாற்றுத்திறனாளி

தினத்தந்தி
|
7 Jan 2023 12:54 AM IST

தூக்கில் பிணமாக மாற்றுத்திறனாளி தொங்கினார்.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அண்ணா சிலை அருகே உள்ள ஆபத்து காத்த விநாயகர் கோவிலின் முன்பு கட்டியிருந்த கைலியை கிழித்து இரும்பு தடுப்பு கம்பியில் தூக்குப்போட்ட நிலையில் மாற்றுத்திறனாளி ஒருவர் பிணமாக தொங்கினார். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர், விளந்தை ஆண்டிமடம் அக்ரகார தெருவை சேர்ந்த கட்டையர் என்பதும், இவர் கடந்த 5 ஆண்டுகளாக அந்த கோவில் முன்பு இருந்து வந்ததும், அவரது 2 கைகளும் செயல்படாத நிலையில் கோவிலுக்கு வருபவர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கொண்டு வந்த உணவை, அவருக்கு ஊட்டி விடுவது வழக்கமாக இருந்ததும், தெரியவந்தது. 2 கைகளும் செயல்படாத நிலையில் அவர் தூக்கில் தொங்கியது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரேனும் அவரை தூக்கில் தொங்கவிட்டு சென்றனரா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்