< Back
மாநில செய்திகள்
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

தினத்தந்தி
|
3 Jan 2023 12:44 PM IST

அடுத்த மாதம் செய்முறை தேர்வு நடைபெற இருப்பதால், நாளை ஹால் டிக்கெட் வெளியிடப்படுவதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

நடப்பாண்டுக்கான, 12ம் வகுப்பு பொது தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். அடுத்த மாதம் மாணவர்களுக்கு செய்முறை தேர்வும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் நாளை வெளியாக உள்ளது. நாளை பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழக தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

முன்னதாக, இந்த கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்விற்கான கால அட்டவணையை தமிழ்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.

மேலும் செய்திகள்