< Back
மாநில செய்திகள்
குடியாத்தம் பகுதி மக்களை குளிர்வித்த ஆலங்கட்டி மழை
மாநில செய்திகள்

குடியாத்தம் பகுதி மக்களை குளிர்வித்த ஆலங்கட்டி மழை

தினத்தந்தி
|
2 May 2024 6:17 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் ஆலங்கட்டியுடன் கோடை மழை பெய்தது.

வேலூர்,

தமிழகத்தில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. எனினும், சில இடங்களில் மிதமான மழை பெய்து சற்று வெப்பத்தை தணித்து வருகிறது.

அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் இன்று 107 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கடும் வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது.

மேல் ஆலத்தூர், கூட நகரம், கொத்தகுப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆலங்கட்டியுடன் மழை பெய்து சற்று வெப்பம் தணிந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் செய்திகள்