< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
மணமகளை ரேக்ளா வண்டியில் அழைத்து வந்த மணமகன்...! சென்னையில் ருசிகரம்
|2 Feb 2023 9:44 PM IST
சென்னை அருகே மணமகளை ரேக்ளா வண்டியில் மணமகன் அழைத்து வந்த ருசிகரம் நிகழ்வு நடந்தது.
சென்னை,
சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் கோபால் கண்ணகி தம்பதியினர். இவர்களது மகன் விஜய். அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் மேரி தம்பதியினர் மகள் ரம்யா. இவர்கள் இருவருக்கும் அவர்களது குலதெய்வம் கோயிலில் இன்று திருமணம் நடைபெற்றது.
அப்போது கோவிலில் இருந்து வீட்டிற்கு மணமகளை மாடுகள் பூட்டிய ரேக்ளா வண்டியில் மணமகன் அழைத்து வந்தார். உறவினர்கள் நண்பர்கள் புடை சூழ அவர் ரேக்ளா வண்டியை ஓட்டி வந்தார். அவர்களை மலர் தூவி உறவினர்கள் வரவேற்பு அளித்தனர்.
பொதுவாக திருமணங்கள் நடந்த முடிந்த பின்பு மணமக்களை ஆடம்பர கார்களில் ஊர்வலமாக அழைத்து வருவது வழக்கம் ஆனால் பழைய பாரம்பரியம் மறக்காமல் மணமகளை ரேக்ளா வண்டியில் அழைத்து வந்த மணமகனை பொதுமக்கள் வியப்பாக பார்த்தனர்.