< Back
மாநில செய்திகள்
பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாத்தா... போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
மாநில செய்திகள்

பிறந்து 38 நாட்களே ஆன குழந்தையை கொன்ற தாத்தா... போலீசில் பரபரப்பு வாக்குமூலம்

தினத்தந்தி
|
18 Jun 2024 5:15 AM IST

குழந்தையின் தாத்தா மீது சந்தேகம் கொண்ட போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம், உட்கோட்டை வெள்ளாளர் தெருவை சேர்ந்த வீரமுத்து (வயது 58)-ரேவதி தம்பதியின் மகள் சங்கீதா. இவரது கணவர் பாலமுருகன்.

கடந்த மாதம் சங்கீதாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு சாத்விக் என்று பெயரிட்டனர். இதையடுத்து சங்கீதா குழந்தையுடன் உட்கோட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 14-ந்தேதி அதிகாலை தனது குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்துவிட்டு, சங்கீதாவும் தூங்கிவிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டுக்கு பின்புறம் இருந்த தண்ணீர் பேரலில் குழந்தை இறந்து கிடந்தது.

இதுகுறித்து குழந்தையின் தாத்தா வீரமுத்து மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, தனி இடத்தில் வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், பிறந்து 38 நாட்களே ஆன அந்த குழந்தையை கொலை செய்தது அவர்தான் என்ற திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. "சித்திரையில் பிறந்ததால் குடும்பத்திற்கு ஆகாது என்று கொன்றேன்" என்று அவர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதையடுத்து வீரமுத்துவை கைது செய்தனர். மேலும் உட்கோட்டையில் உள்ள வீட்டில் வீரமுத்து குழந்தையை எப்படி கொன்றார் என்பதை நடித்துக்காட்ட, அதனை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்