< Back
மாநில செய்திகள்
குடியரசு தினத்தன்று சமூக சேவை விருது பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்டார் கவர்னர்
மாநில செய்திகள்

குடியரசு தினத்தன்று சமூக சேவை விருது பெறுபவர்களின் பட்டியலை வெளியிட்டார் கவர்னர்

தினத்தந்தி
|
22 Jan 2023 3:21 PM IST

குடியரசு தினத்தன்று சமூக சேவை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகிய விருது பெறுவோர் பெயர்களை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ளார்.

சென்னை,

குடியரசு தினத்தன்று சமூக சேவை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு ஆகிய விருது பெறுவோர் பெயர்களை கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ளார்.

அதன்படி விவேகானந்தா கிராமப்புற மேம்பாடு கழக செயலாளர் ஆர்.பி.கிஷ்ணமாச்சாரி சமூக சேவைக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'சிறுதுளி' என்ற அமைப்பைச் சேர்ந்த வனிதா மோகன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய விருதுகளை பெறுவோருக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். வருகிற 26-ந்தேதி குடியரசு தினத்தன்று சென்னை ராஜ்பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் மேற்கண்ட விருதுகளை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வழங்க உள்ளார்.

மேலும் செய்திகள்