< Back
மாநில செய்திகள்
கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அரசின் மெத்தனப்போக்கே காரணம்முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகரன் பேட்டி
விழுப்புரம்
மாநில செய்திகள்

கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அரசின் மெத்தனப்போக்கே காரணம்முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகரன் பேட்டி

தினத்தந்தி
|
18 May 2023 12:15 AM IST

கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு அரசின் மெத்தனப்போக்கே காரணம்ட என்று முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகரன் தொிவித்தாா்.


மரக்காணத்தில் விஷ சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை நேற்று ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. ஜே.சி.டி.பிரபாகரன் பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

அதன் பின்னர் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், அரசின் மெத்தனப்போக்கையும், அரசின் செயல்படாத தன்மையையும் இச்சம்பவம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் சமச்சீராக சாராய விற்பனை நடைபெற்று வருகிறது. அரசு முறையான சீரான ஒரு மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம்.

ஒட்டுமொத்தமாக இந்த மதுவிலக்கு கொள்கையில் ஒரு நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும். கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக ஏழை தாய்மார்களின் கண்ணீர் ஒரு சாபமாக மாறி, போராட்டமாக வெடிப்பதற்குள் அரசு விழித்துக்கொள்ள வேண்டும். உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படுவதாக நான் பேசிய வகையில் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனாலும், அவர்களை சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம் என்றார்.

மேலும் செய்திகள்