< Back
மாநில செய்திகள்
டயர் வெடித்து குளத்தில் இறங்கிய அரசு பஸ்
திருச்சி
மாநில செய்திகள்

டயர் வெடித்து குளத்தில் இறங்கிய அரசு பஸ்

தினத்தந்தி
|
10 July 2023 2:47 AM IST

டயர் வெடித்து குளத்தில் அரசு பஸ் இறங்கியது.

துவரங்குறிச்சி:

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் நாகர்கோவிலுக்கு ஒரு அரசு விரைவு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் சுமார் 30 பயணிகள் பயணம் செய்தனர். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள வெங்கட்நாயக்கன்பட்டி பிரிவு ரோடு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன்புறம் உள்ள வலதுபக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் மைய தடுப்பை தாண்டி மறுபுறம் உள்ள சாலையில் ஓடி, அதையடுத்துள்ள துவரங்குறிச்சி - திருச்சி அணுகு சாலையையும் கடந்து, சாலையோரத்தில் உள்ள பூசாரிகுளத்தில் இறங்கிய நிலையில் நின்றது.

இதில் பஸ்சின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உள்ளிட்ட அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். பின்னர் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு, மற்றொரு பஸ்சின் மூலம் நாகர்கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்