< Back
மாநில செய்திகள்
அரசு பஸ்சை மறித்து ரகளை
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

அரசு பஸ்சை மறித்து ரகளை

தினத்தந்தி
|
1 Feb 2023 12:15 AM IST

அரசு பஸ்சை மறித்து ரகளை

சின்னசேலம்

மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் சண்முக மகன் வசந்த்(வயது 27), கணபதி மகன் சின்னத்தம்பி(29). இவர்கள் இருவரும் சம்பவத்தன்று காலை மூங்கில்பாடி ஊராட்சி அலுவலகத்துக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் நடந்து முடிந்த கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி கணக்கு வழக்குகளை சரியாக காண்பிக்கவில்லை என்று கூறி பிரச்சினை செய்தனர். பின்னர் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஊராட்சி அலுவலகம் முன்புள்ள சாலையில் மேல்நாரியப்பனூரில் இருந்து சின்னசேலம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பஸ்சை திடீரென வழிமறித்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்ததாக தெரிகிறது. இது குறித்து மூங்கில்பாடி கிராம நிர்வாக அலுவலர் தமிழரசி(36) கொடுத்த புகாரின் பேரில் வசந்த், சின்னதம்பி ஆகிய இருவர் மீதும் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்