< Back
மாநில செய்திகள்
ஒரு தாயின் பாசம்: நாய் விட்டுச்சென்ற குட்டிகளை பாதுகாத்து வந்த நல்ல பாம்பு...! பிரம்மிப்பில் பொதுமக்கள்
மாநில செய்திகள்

ஒரு தாயின் பாசம்: நாய் விட்டுச்சென்ற குட்டிகளை பாதுகாத்து வந்த நல்ல பாம்பு...! பிரம்மிப்பில் பொதுமக்கள்

தினத்தந்தி
|
12 Dec 2022 4:06 PM IST

கடலூரில் தாய் நாய்விட்டு சென்ற குட்டிகளை நல்ல பாம்பு பாதுகாத்து வந்த நிகழ்வு பிரம்மிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்,

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூரில் வீடுகட்ட தோண்டிய பள்ளித்தில் நாய் ஒன்று 3 குட்டிகளை ஈன்று பாதுகாப்பாக வைத்துவிட்டு சென்றுள்ளது.

அப்போது அங்குவந்த நல்ல பாம்பு ஒன்று, நாய் குட்டிகள் இருந்த பள்ளத்தில் இறங்கி குடிகள் முன் படம் எடுத்து நின்றுள்ளது. பின்னர், வந்த தாய் நாய் தனது குட்டிகளின் பக்கத்தில் பாம்பு இருப்பதை பார்த்து குட்டி களை பாதுகாக்க வேகமாக சென்றது. ஆனால் அந்த நல்ல பாம்பு தாய் நாயையும் குட்டிகளிடம் விடவில்லை. இதனால் தாய்நாய் நீண்ட நேரமாக குறைத்துக் கொண்டிருந்தது.

நீண்ட நேரமாக நாய் குறைத்து கொண்டு இருந்ததால் அருகில் இருந்த பொது மக்கள் அங்கு வந்து பார்த்தனர். அப்போது நல்ல பாம்பு நாய் குட்டிகளை பாதுகாத்துக் கொண்டு இருப்பதை பிரமிப்புடன் கண்டனர். மேலும் நாய்க்குட்டிகளை மீட்க சென்ற பொதுமக்களை பார்த்து நல்ல பாம்பு படம் எடுத்து மிரட்டியது.

இதனை தொடர்ந்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் நாய்க்குட்டிகளுடன் இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து பாதுகாப்பாக காட்டில்விட்டார்.

மேலும் செய்திகள்